Tuesday, August 6, 2019

நாளைய கலாம் விருது


டாக்டர் அப்துல்கலாம் நினைவு தினம் 

டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தன்று, இராமேஸ்வரத்தில் காஞ்சி முத்தமிழ் சங்கத்தின் முத்தமிழ் மையத்தால் 2019 மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள அறிவியலில் ஆர்வமுள்ள மற்றும் பன்முக திறமைகள் கொண்ட மாணாக்கர்களுக்கு விருதுகள், பதக்கங்கள்  மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கபட்டது. அந்த வகையில் எழுத்தாளர்கருமலை நாகராஜ் அவர்களுக்கு  "நாளைய கலாம் விருது" வழங்கப்பட்டது. இவ்விழாவில் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர், காஞ்சி முத்தமிழ் மையம் நிறுவனர் மற்றும் சான்றோர் பலர் கலந்துக்கொண்டனர்.

சிறந்த பேச்சாளருக்கான "நாளைய கலாம் விருது 2019"



 

படத்தில் அறக்கட்டளை நிறுவனர் திரு. நடராஜன், முன்னாள் ராணுவ வீரர்கள், கருமலை நாகராஜ் )


பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளையின் முப்பெரும் விழாவில் சமூகம், கல்வி, கலை, இலக்கியம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த தமிழக சாதனையாளர்களுக்கு அவர்களின் பணிகளையும், திறமைகளையும் பாராட்டி விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அந்த வகையில் எழுத்தாளர், பேச்சாளர் கருமலை நாகராஜ் அவர்களுக்கும்  சிறந்த பேச்சாளருக்கான "நாளைய கலாம் விருது 2019" திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டது. 

Saturday, March 30, 2019

அகரத்தின் சிறந்த எழுத்தாளர் விருது

வாழ்க்கையில் கிடைத்த சிறந்த அங்கீகாரம்

மார்ச் 03, 2019 வாழ்வின் முக்கியமான மறக்கமுடியாத தருணம் அது. திருச்சியில் உள்ள MAM Group of Instituition ல் பயிலும் அகரம் மாணவர்கள் நடத்திய Magsa 2.0 என்ற மாபெரும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு திரு. பாஸ்கர் அண்ணாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அதற்கு முன்பே, திரு. ஜான் விக்டர் அண்ணா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறேன் நீயும் என்னோடு வருகிறாயா? என்று கேட்டார். நான் இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதால் வர இயலவில்லை அண்ணா என்று சொல்லி விட்டேன். சில நாட்களுக்கு பிறகு அந்த அழைப்பின் காரணமாக கேட்டதும் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் நீ போயிட்டு வா என்று சொல்லிவிட்டார். சரி நாமாக தான் தனியாக செல்ல வேண்டுமா என்று நினைத்துவிட்டு அன்று இரவு செம்மொழி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் அருமையான பயணத்தை மேற்கொண்டேன். அடுத்த நாள் பொழுது இனிமையாக விடிந்தது .நான் கல்லூரியை ஒரு வழியாக தேடி பிடித்து சென்று விட்டேன். அங்கே சென்றதும் முதலாவதாக பாஸ்கர் அண்ணாவை பார்த்தேன் வணக்கத்தை சொல்லி விட்டு அரங்கத்திற்கு சென்றேன். அங்கு போனதும் பெரிய ஏமாற்றம், ஆச்சர்யம் என்னடா ! இது ஜான் அண்ணா வீட்டுக்கு வந்துட்டேன் என்று சொன்னாரே எப்படி இங்கே தூங்கிக்கொண்டிருக்கிறாரே ? என்று என் மனதில் கேட்டுக்கொண்டே என்னுடைய உடைமைகளை கீழே வைத்தேன். பிறகு அவரிடம் கேலியாக பேசி விட்டு மேலும் இராமச்சந்திரன் அண்ணா, கணேஷ் அண்ணா இவர் நண்பர்கள் அனைவரோடும் பேசிவிட்டு நிகழ்ச்சிக்கு தயாரானேன். என்னுடைய நண்பர்கள் விக்னேஷ், தமிழ்செல்வன், கரண் என்று பல பேரிடம் பேசிக்கொண்டிருந்தேன். இவர்கள் முன்னெடுத்த தம்பி, தங்கைகள் உதவியோடு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது. இதற்கு பக்க பலமாக பாஸ்கர் அண்ணா அவர்களையெல்லாம் வழிநடத்திக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு இயற்கையை போற்றி வாழும் நற்சிந்தனையாளர் திரு. அந்தோணி அண்ணா அவர்கள் குடும்பத்தோடு நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்திருந்தார். அவரை முதல் முறையாக அன்று தான் சந்தித்தேன் அது இனிய சந்திப்பு எனக்கு . மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது அந்த ஆனந்த நிகழ்ச்சி. அகரம் மூலம் பல மண்டலங்களில் இருந்து படிக்க கூடிய மாணவர்கள் இந்த நிகழ்ச்சியின் பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டனர். எங்கள் கோவை சங்கரா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அருமை தங்கை மகாலக்ஷ்மியும் கலந்துக்கொண்டார். நானும் போட்டிகள் நடைபெறும் அறைகளுக்கெல்லாம் சென்று பார்வையாளனாக கண்டுகளித்தேன். மதியம் அருமையான உணவு இடைவேளைக்கு பிறகு Connection Game show நடைபெற்றது. அந்த விளையாட்டிற்கு Mrs. மேனகா அக்கா, Mrs. பாக்கியலட்சுமி அக்கா மற்றும் ஏற்கனவே குறிப்பிட்ட அண்ணா- அக்காக்களோடும், தம்பி- தங்கைகளோடும், நண்பர்களோடும் மகிழ்ச்சியாய் நடைபெற்றது. அதன் பின் தான் மிக முக்கியமான நிகழ்வு அரங்கேறியது. அது என்னவென்றால், சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்காக விருதுகள் தற்பொழுது வழங்கப்படுகிறது என்று அறிவித்தார்கள். நான் எதையும் பெரிதாக நினைக்காமல் அமர்ந்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால் ,என்னை அழைக்கும் பொழுது நீ கட்டாயமாக வர வேண்டும் என்று மட்டும் குறிப்பிட்டார்கள். முதலாவதாக என்று ஆரம்பித்து பல பெருமைக்குரிய வரிகளை சொல்லி அகரத்தின் சிறந்த எழுத்தாளர் ம. நாகராஜ் என்று சொன்னதும் என்னை நான் மறந்து போகும் அளவிற்கு ஆனந்தமாக உணர்ந்தேன்.







        






                                                                                                                                                                                                                                                                                                                                                             




















உடனே மேடைக்கு வரும்படி அழைத்தார்கள் சென்றேன். அற்புதமான அந்த விருதை திரு.அந்தோணி அண்ணா அவர்களின் கரங்களில் இருந்து பெற்றுக்கொண்டேன். பிறகு, ஒரு சில வார்த்தைகள் பேசும்படி சொன்னார்கள் பேசினேன். அடுத்ததாக அகரத்தின் சிறந்த பத்திரிக்கையாளர் விருதை திரு. இராமச்சந்திர பாண்டியன் அண்ணா அவர்களுக்கு வழங்கப்பட்டது. இறுதியாக தம்பி யுவபாரத் அவர்களுக்கு அகரத்தின் சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. எங்களுக்கு விருதை வழங்கியதோடு பரிசு பெற்றவர்களுக்கு பரிசை வழங்கவும் அழைத்தது மிகப்பெரிய அங்கீகாரம் அதற்கு அகரத்திற்கும், அண்ணா அக்காக்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நிமிடங்கள் என்றுமே எனக்கு இனிய மலரும் நினைவுகளாகவே இருக்கும். நிகழ்ச்சியில் எல்லோருடனும் சிரித்து பேசிவிட்டு விடைப்பெற்றேன். நண்பர் விக்னேஷ் என்னை வண்டியில் பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்து சென்று பேருந்தில் ஏற்றிவிட்டார் . இப்படி இனிய நாளில் இனிய நிகழ்வுகள் நடந்தது. இனிமையான தருணங்களை அமைத்து தந்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

நாளைய கலாம் விருது

டாக்டர் அப்துல்கலாம் நினைவு தினம்  டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தன்று, இராமேஸ்வரத்தில் காஞ்சி முத்தமிழ்...